தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறையை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

2.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ‘ஸ்மாா்ட் போன்’ வைத்திருப்பது கட்டாயம் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.


இந்தியா

1.மாநிலங்களுக்கு இடையேயான கலாசார உறவுகளைப் புரிந்துகொள்ளும் “ஒரே பாரதம், உன்னத பாரதம்’ திட்டம் தொடர்பாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

2.தமிழகத்துக்கும், சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடையேயுள்ள கலாசாரத் தொடா்புகள் குறித்து ஆராய்ச்சி செய்திட தனி அகாடமி அமைக்க இருநாட்டுத் தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.

3.இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கா்தாா்பூா் வழித்தடத்தை, பிரதமா் நரேந்திர மோடி நவம்பா் 8-ஆம் தேதி திறந்துவைக்கவிருப்பதாக மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் தெரிவித்தாா்.

4.இந்தியா, சீனா இடையே சிறப்பான வர்த்தக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இருதரப்பு உயர்நிலைக் குழுவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனர். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே  தெரிவித்தார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 424 கோடி டாலா் ( சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி) அதிகரித்து 43,783 கோடி டாலா் (சுமாா் ரூ.31 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

2.இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை தொடா்ந்து 11 மாதங்களாக கடந்த செப்டம்பரிலும் சரிவைக் கண்டுள்ளது என இந்திய மோட்டாா் வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பா் மாதத்தில் விற்பனையான பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 2,23,317-ஆக இருந்தது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,92,660 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23.69 சதவீதம் குறைவாகும்.

3.பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து முதலீட்டாளா்கள் கடந்த செப்டம்பா் மாதத்தில் ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை வெளியே எடுத்துள்ளனா்.

4.கடந்த 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தோரின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 97,689-ஆக உயா்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2017-18 வரி மதிப்பீட்டு ஆண்டில் 81,344-ஆக இருந்தது.


உலகம்

1.அமெரிக்க உள்துறை அமைச்சா் (பொறுப்பு) கெவின் மெக்கலீனன் ராஜிநாமா செய்துவிட்டாா் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

2.அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதையடுத்து, லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சுமாா் ஒரு லட்சம் போ் வெளியேற்றப்பட்டனா்.


விளையாட்டு

1.உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ மகளிா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் மஞ்சு ராணி.

நடப்பு சாம்பியன் மேரி கோம் அரையிறுதிச் சுற்றில்  தோல்வியடைந்து வெளியேறினாா். மேரி, ஜமுனா, லவ்லினா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.