தமிழகம்

1.முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 58.

2.மலையேற்றம் செய்வதற்கான பாதைகளை மூன்றாகப் பிரித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு குழுவிலும் தலா 5 பேர் மட்டுமே இடம்பெறுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

3.திருப்பத்தூர் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா காலத்து செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.

2.வேலைநாள்களில் நீதிபதிகள் விடுப்பில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

3.சமூக வலைதளமான சுட்டுரையில் “மீ டூ’ என்ற பெயரில் பெண்கள் முன்வைத்து வரும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.


வர்த்தகம்

1.நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 3.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில் சில்லறைப் பணவீக்கம் 3.28 சதவீதமாக காணப்பட்டது.

2.சுரங்க துறையின் செயல்பாடு பின்னடைவைக் கண்டதையடுத்து, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.3 சதவீதமாக குறைந்து போனது.நடப்பாண்டு மே மாதத்தில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 3.9 சதவீதமாக காணப்பட்டது. இது ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 6.5 சதவீதமாகவும் இருந்தது.

3.உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் முதல் ஆறுமாத காலத்தில் 6.88 சதவீதம் அதிகரித்துள்ளது.

4.சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


உலகம்

1.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
193 நாடுகளை உறுப்பினர்களாக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடத்தியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் 97 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், 188 நாடுகளின் ஆதரவுடன் இந்தியா வெற்றி பெற்று, மீண்டும் உறுப்பினராகியுள்ளது.

2.இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷியா நிறுத்திவைத்துள்ளது.

3.இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார்.


விளையாட்டு

1.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் வெரேவ் ஆகியோர் மோதுகின்றனர்.

2.ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா மேலும் 3 தங்கம்வென்றது.
மகளிர் பி1 செஸ் போட்டியில் கே.ஜெனித்தா ஆன்டோ 1-0 என இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் மனுருங்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.
ஆடவர் வி1 ரேபிட் செஸ் போட்டியில் கிஷன் கங்கோலி சிறப்பாக ஆடி மஜித் பாகேரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற ஆட்டக்கணக்கில் தாய்லாந்தின் வான்டி கம்டமை வீழ்த்தி தங்கம் வென்றார்.

3.உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார்.65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஜ்ரங் புனியா உள்ளார். இந்த உலக சாம்பியன் போட்டியில் தான் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

4.சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய ஜூனியர் அணி தகுதி பெற்றுள்ளது.

5.21 ஆண்டுகள் கழித்து சீனா-இந்தியா இடையே நட்பு கால்பந்து போட்டி இன்று சீனாவின் சுஷூ நகரில் நடைபெறுகிறது.


ன்றைய தினம்

  • சர்வதேச இயற்கை பேரிடர் தினம்
  • தாய்லாந்து தேசிய காவல்துறை தினம்
  • சர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)
  • வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)
  • துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)
  • தென்னகம்.காம் செய்தி குழு