தமிழகம்

1.கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் என்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள “கஜா’ புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா

1.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்திய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), தனது முதல்கட்ட அறிக்கையை, மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

2.இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை  (நவ.14) மாலை 5.08 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

3.பிரான்ஸிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் விலை விவரங்களை, மூடிய உறையில் வைத்து சீலிட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை சமர்ப்பித்தது.


வர்த்தகம்

1.சில்லறைப் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 3.31 சதவீதமாக குறைந்துள்ளது.இது ஓராண்டில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

2.சுரங்கம் மற்றும் பொறியியல் பொருள்கள் துறையில் காணப்பட்ட சுணக்க நிலையால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.


உலகம்

1.இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நிலம்பர் ஆச்சார்யா பெயரை அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.

2.வங்கதேசத்தில் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

3.இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளிடையே, குற்றச்செயல் மற்றும் சட்ட விவகாரங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கிடும் வகையில் ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.புதுச்சேரியில் முதல்முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

2.உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் இருந்து இந்திய கிராண்ட்மாஸ்டர் துரோணவல்லி ஹரிகா தோல்வியுற்று வெளியேறினார்.


ன்றைய தினம்

  • சர்வதேச கருணை தினம்
  • உலக வலைப் பின்னல்(WWW) ஆரம்பிக்கப்பட்டது(1990)
  • கார்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது(1957)
  • கிரீஸ் நாட்டின் புதிய அரசியலமைப்பு பெறப்பட்டது(1864)
  • தென்னகம்.காம் செய்தி குழு