தமிழகம்

1.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது முழுவதுமாக வறண்டு விட்டது.

2.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளராக ஏ.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செயலாளராக உள்ளார்.


இந்தியா

1.மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை  வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 63.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் குறைந்துள்ளது.

2.கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சிண்டிகேட் வங்கி ரூ.128.02 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.பிரிட்டனின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துஜா குழும உரிமையாளர்கள் ஸ்ரீசந்த் ஹிந்துஜா, கோபிசந்த் ஹிந்துஜா சகோரர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர்.


விளையாட்டு

1.ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன்னில் வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

2.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கிகி பெர்டென்ஸ்.


ன்றைய தினம்

  • டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)
  • பிரேசில், அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்தது(1888)
  • இந்திய பார்லிமென்ட்டின் இரு சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற்றது (1952)
  • இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம்(2001)

 

– தென்னகம்.காம் செய்தி குழு