தமிழகம்

1.தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

2.காச நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிறப்பான சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றில் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.


இந்தியா

1.கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

2.வயதான பெற்றோர்களை கைவிடும் அல்லது கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபடும் வாரிசுகளுக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


வர்த்தகம்

1.நடப்பு நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.7,280 கோடியாகியுள்ளது.

2.ஹிந்துஸ்தான இன்ஃப்ராலாக் நிறுவனம், சிவிசி ஆசியா பிசிபிக், அல்கான் லேபரட்டரீஸ் ஆகிய 3 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.


உலகம்

1.ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதற்காக திங்கள்கிழமை நடைபெறும் விழாவில், விடியோ மூலம் அதிபர் டிரம்ப் உரையாற்றவிருக்கிறார்.


விளையாட்டு

1.தேசிய பயிற்சி முகாம்கள், பயிற்சி மையங்களில் மருந்து ஊசிகளை தடகள வீரர்கள் கொண்டு செல்ல இந்திய அமெச்சூர் தடகள சங்கம் (ஏஃஎப்ஐ) தடை விதித்துள்ளது.


ன்றைய தினம்

    • அன்னையர் தினம்
    • டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)
    • பிரேசில், அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்தது(1888)
    • இந்திய பார்லிமென்ட்டின் இரு சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற்றது (1952)
    • இந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம்(2001)

–தென்னகம்.காம் செய்தி குழு