Current Affairs – 13 March 2019
தமிழகம்
1.சென்னை உயர்நீதிமன்றத்தின் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இந்தியா
1.எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்து எதிரொலியாக, இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை, ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
வர்த்தகம்
1.பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.2,337.88 கோடி மதிப்பிலான ஆறு வாராக் கடன்களை ஏலத்தில் விடவுள்ளது.
உலகம்
1.வட கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த பெயரளவிலான நாடாளுமன்றத் தேர்தலில் 99.99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
2.வெனிசூலாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
3.நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் மறுசீரமைப்பு பணிகளுக்காக, அந்நாட்டுக்கு இந்தியா சுமார் ரூ. 1, 742 கோடி நிதியுதவி வழங்கியது.
விளையாட்டு
1.இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒஸாகா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இன்றைய தினம்
- வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)
- மங்கோலியா, சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1921)
- ஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)
- இந்தியாவின் நவீன தொழிற்துறையின் முன்னோடியான ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)
- தமிழறிஞர் கா.நமச்சிவாயம் இறந்த தினம்(1936)
– தென்னகம்.காம் செய்தி குழு