தமிழகம்

1.ஓட்டுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14 சதவீதம் சரிவடைந்துள்ளது.

2.தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.

2.ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

3.கடந்த 11 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சம் கோடி அளவில் வங்கிகளில் கடன் உள்ளிட்ட நிதி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 3.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அதிகரிப்பாகும்.

2.கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வளர்ச்சி ஆகும்.

3.உல­க­ள­வில், நம்­பிக்கைக்கு உகந்த பிராண்­டு­களில், முதல் இடத்தை, ‘அமே­சான்’ பிடித்­துள்­ளது.உலக சந்தை ஆராய்ச்சி நிறு­வ­ன­மான, ‘கன்­டார்’ இதனை தெரிவித்துள்ளது.


உலகம்

1.தெற்காசிய அரசியல் விவகாரங்களில் அனுபவம் நிறைந்த சன் வெய்டோங்கை இந்தியாவுக்கான புதிய தூதராக சீனா நியமித்துள்ளது.

2.உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் பின்தங்கி, 141-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த ஆண்டும் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடம் பெற்றுள்ளது.

3.கஜகஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜமாட் டோகயேவ், அந்த நாட்டின் புதிய அதிபராக  பொறுப்பேற்றுக் கொண்டார்.


விளையாட்டு

1.உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஒரே இந்தியராக கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.
அவரது ஆண்டு வருவாய் ரூ.173 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரங்கள் உள்ளிட்ட வகைகளில் சுமார் ரூ.145 கோடியும், இந்திய அணியில் ஊதியமாக பெற்றது, போட்டிகளில் வென்றது போன்ற வகையில் ரூ.27 கோடியும் அவர் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

  • ஐ.நா.,வின் 8வது பொதுச் செயலாளர் பான் கி மூன் பிறந்த தினம்(1944)
  • சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1955)
  • இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)
  • பயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)

– தென்னகம்.காம் செய்தி குழு