Current Affairs – 13 June 2018
தமிழகம்
1.சுய உதவிக் குழுக்களுக்கு நிகழாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன்கள் அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
2.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திருமலை திருப்பதி கோயில் மகா கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தியா
1.நாட்டின் 10 விமான நிலையங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 1,100 வீரர்கள் கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2.குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் (1098) சேவையை மேலும் 435 இடங்களுக்கும் முக்கிய ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தி மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வர்த்தகம்
1.காய்கறிகளின் விலை உயர்ந்ததையடுத்து நாட்டின் சில்லறை பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 4.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
2.இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தயாரிப்புத் துறை மற்றும் சுரங்கத் துறைகளின் செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்து தொழிலக உற்பத்தி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த தொழிலக உற்பத்தி விகிதம் 3.2 சதவீதம் என்ற அளவிலும், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 4.4 சதவீதம் என்ற அளவிலும் காணப்பட்டன.
உலகம்
1.கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த, சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
2.பிரெக்ஸிட் மசோதா தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரஸா மே தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
விளையாட்டு
1.மெர்சிடஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் விளையாட இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தகுதி பெற்றார்.
இன்றைய தினம்
- சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1955)
- இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)
- பயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)
–தென்னகம்.காம் செய்தி குழு