Current Affairs – 13 July 2019
தமிழகம்
1.நடப்பாண்டில் ரூ.28 கோடியில் விரிவான தேனீ வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அறிவித்தார்.
இந்தியா
1.பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததை அடுத்து, இண்டிகோ விமான நிறுவனத்தின் 4 உயரதிகாரிகளுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2.புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், அரசின் அன்றாட அலுவல்களில் ஈடுபடும் வகையில், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
வர்த்தகம்
1.ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘இ – வே’ பில் முறையில், தமிழகத்தில் ஓராண்டில் ஐந்து கோடி ‘பில்’கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, வணிக வரித் துறை தெரிவித்து உள்ளது.
2.தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாயிலாக, 2.23 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக, எம்.எஸ்.எம்.இ., துறை தெரிவித்துள்ளது.
3.தொழிற்சாலைகள் மற்றும் அவற்றில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கையில், இந்தியாவில் முதலிடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
4.நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்பணவீக்கம் முந்தைய மே மாதத்தில் 3.05 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 4.92 சதவீதமாகவும் காணப்பட்டது.
5.நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் ஒட்டுமொத்த அளவில் முதல் காலாண்டில் ரூ.3,802 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.21,803 கோடியாக இருந்தது. 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.19,128 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 13.9 சதவீதம் அதிகமாகும்.
உலகம்
1.அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடமிருந்து அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்களை துருக்கி பெற்றது.
விளையாட்டு
1.விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரர் மோதிய ஆட்டத்தில் பெடரெர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்
இன்றைய தினம்
- லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் மலையின் மேல் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)
- இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)
- பெர்லின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1878)
- முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் நடைபெற்றன(1930)
– தென்னகம்.காம் செய்தி குழு