Current Affairs – 13 July 2018
தமிழகம்
1.சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் உள்ள பழைமையான ஸ்மித் நினைவு மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2.போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா
1.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயமல்ல என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
2.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.3,685.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார்.
வர்த்தகம்
1.உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கியின் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. மேலும், விரைவில் 5-ஆவது இடத்தில் இருக்கும் பிரிட்டனை முந்தக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சென்ற மே மாதத்தில் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் சென்ற மே மாதத்தில் 3.2 சதவீதமாக குறைந்து போயுள்ளது. இது, ஏப்ரல் மாதத்தில் 4.8 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மே மாதத்தில் 2.9 சதவீதமாகவும் காணப்பட்டது.
3.நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 5 மாதங்கள் காணாத அளவில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகம்
1.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான புதிய அறிக்கையை பிரிட்டன் வெளியிட்டது.
2.அமெரிக்காவில் சுயதொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சாதனைப் பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம்பெற்றுள்ளனர்.ஜெயஸ்ரீ உல்லல் 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.8,917 கோடியாகும்.நீரா சேத்தி 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.6,859 கோடியாகும்.
விளையாட்டு
1.விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இறுதிச் சுற்றுக்கு ஜெர்மனியின் ஏ.கெர்பர், செரீனா ஆகியோர் முன்னேறினர். ஆடவர் அரையிறுதிச் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் நடால்-ஜோகோவிச் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் கெவின் ஆண்டர்சன்-ஐஸ்நர் ஆகியோர் மோதுகின்றனர்.
2.விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தோல்வியடைந்தார்.
இன்றைய தினம்
- லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் மலையின் மேல் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)
- இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)
- பெர்லின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1878)
- முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் நடைபெற்றன(1930)
–தென்னகம்.காம் செய்தி குழு