தமிழகம்

1.தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவராக தா.கி. ராமச்சந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

2.தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.


இந்தியா

1.உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

2.தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு புதிய செயலியை சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 4-ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற வாரத்தில் 39,608 கோடி டாலராக (ரூ.27.72 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

2.ஏர் இந்தியாவின் பயணிகள் வருவாய் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

3.தனியார் துறையைச் சேர்ந்த ஐடிஎஃப்சி வங்கியின் பெயர் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹவாய் மாகாண எம்.பி. துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.

2.பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.

3.மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றார்.


விளையாட்டு

1.விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கையுந்து பந்து இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2.இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம்.எஸ்.தோனி ஒரு நாள் ஆட்டத்தில் (50 ஓவர்கள்) 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.


ன்றைய தினம்

  • மிக்கி மவுஸ் கார்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது(1930)
  • கானாவில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1972)
  • அரிமா சங்கத்தை நிறுவிய மெல்வின் ஜோன்ஸ் பிறந்த தினம்(1879)
  • விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா பிறந்த தினம்(1949)

– தென்னகம்.காம் செய்தி குழு