தமிழகம்

1.சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு பூண்டி ஏரியை வந்தடைந்தது.


இந்தியா

1.நிதி நிறுவனங்களின் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி நிறுவன மோசடி தடுப்பு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. நிலைக்குழு ஒப்புதல் அளித்ததையடுத்து தற்போது மீண்டும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2.அமெரிக்காவிடமிருந்து 72,400 நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

3.பாரத ரத்னா, பத்ம விருதுகள் ஆகியவற்றை பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.மத்திய அரசு, நாளை மேற்கொள்ளும், பாரத் – 22 இ.டி.எப்., வெளியீட்டில், 3,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.

2.கடந்த ஆண்டு, டிசம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, நவம்பரில், 0.5 சதவீதம், மறுமதிப்பீட்டில், 0.3 சதவீதமாக காணப்பட்டது.


உலகம்

1.அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஐசிசி மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

2.தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சம்மேளனம், இன்டஸ் ஸ்போர்ட்ஸ் லீக் சார்பில் இரண்டாவது டிடிஎஸ்எல் 2019 போட்டிகள் வரும் 22 முதல் 24-ஆம் தேதி வரை சென்னை அண்ணாநகர் வி.ஆர். மைதானத்தில் நடைபெறுகிறது.


ன்றைய தினம்

  • சர்வதேச வானொலி தினம்
  • இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)
  • ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)
  • பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)
  • பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சர் பட்டம் பக்கிங்ஹம் அரண்மனையில் வழங்கப்பட்டது(1914)

– தென்னகம்.காம் செய்தி குழு