தமிழகம்

1.ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் தனி வழி அமைக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷார் காலத்திலும் கொல்கத்தாவே நாட்டின் தலைநகராகவே தொடர்ந்த நிலையில் 1911-ம் ஆண்டு இன்றைய தேதியில் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
2.நாட்டிலேயே முதல் முறையாக சபர்மதி ஆற்றில் இயக்கப்பட்ட நீர்வழி விமானத்தில் பிரதமர் மோடி நேற்று பயணம் செய்தார்.


உலகம்

1.சுமார் 35 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக அடுத்த ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
2.போலாந்து நாட்டின் பிரதமராக இருந்த பீட்டா சைட்லோ ராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேத்யூஸ் மொராவெய்கி நேற்று பதவியேற்றார்.


விளையாட்டு

1.வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முஷ்பிகுர் ரஹிம் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1981 – போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு