தமிழகம்

1.எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
வழங்குகிறார். விருது பெறும் கலைஞர்களுக்கு பொற்பதக்கமும், சான்றிதழும், காசோலையையும் அவர் அளிக்கிறார்.இந்த விழாவுக்கு, பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமை தாங்குகிறார்.


இந்தியா

1.சந்தையில் விற்பனை செய்யப்படும் 18 மருந்துகளை தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

2.புவி சுற்றுவட்டப் பாதையில் கடந்த 21 நாள்களாக சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.
அன்றைய தினம் பூமியிலிருந்து குறைந்தபட்சம் 266 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,13,623 தொலைவையும் கொண்ட புவி சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்படும் விண்கலம், தொடர்ந்து நிலவை நோக்கியும் நகர்த்தப்பட உள்ளது.


வர்த்தகம்

1.டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.11.62 கோடியாக இருந்தது.


உலகம்

1.மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அலெஜாண்ட்ரோ கியாமடேய் வெற்றி பெற்றார்.

2.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை குறைத்துக் கொள்வது தொடர்பான சமீபத்திய பேச்சுவார்த்தையின் சுற்றுகள் நிறைவடைந்துவிட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு

1.கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், பியான்கா ஆன்ட்ரிஸ்கு ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

2.உலக மோட்டார் சைக்கிள் பந்தயம் (எப்ஐஎம்) மகளிர் பிரிவில் முதன்முறையாக 2-ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ஐஸ்வர்யா பிஸ்ஸா.


ன்றைய தினம்

  • சர்வதேச உடல் உறுப்பு தான தினம்
  • ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)
  • பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது(1954)
  • மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)
  • சர்வதேச இடது கையாளர்கள் தினம்

– தென்னகம்.காம் செய்தி குழு