Current Affairs – 13 August 2018
தமிழகம்
1.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹிலராமாணீ ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம், ஆகஸ்ட் 15 -ஆம் தேதி முதல்முறையாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்தியா
1.பன்னிரண்டு வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகைச் செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
2.அடுத்த 3 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
3.ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கல்பேஷ் சத்யேந்திர ஜாவேரி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
வர்த்தகம்
1.மின்னணு வர்த்தக வரைவு கொள்கை குறித்து, சிலர் தெரிவித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக, மீண்டும் பரிசீலனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2.மத்திய அரசு, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது.தற்போது, 1.50 கோடி ரூபாய்க்கு மிகாத விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், ஒரு மாத விற்பனை விபரங்களை, ஜி.எஸ்.டி.ஆர் – 1 படிவம் மூலம், அடுத்த மாதம், 10ம் தேதிக்குள் தாக்கல் செய்கின்றன.இந்த, ‘கெடு’ நாள், 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
3.சிறு, குறு தொழில் முனைவோர் மற்ற தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததற்கான பணம் பெற முடியாத சூழ்நிலையில் சிறு, குறு தொழில் முனைவோரை பாதுகாப்பதற்காக “சமாதான்’ என்ற வலைதளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
உலகம்
1.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘பார்க்கர் சோலார் புரோப்’ விண்கலத்தை நாஸா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2.நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் வி.எஸ்.நைபால் (85), லண்டனில் சனிக்கிழமை காலமானார்.சர் வித்யாதிர் சுராஜ்பிரசாத் நைபால் என்ற இயற்பெயர் கொண்ட வி.எஸ்.நைபால், கரீபியன் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் தீவில், இந்திய வம்சாவளி தம்பதிக்கு கடந்த 1932}ஆம் ஆண்டு பிறந்தார்.பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். அதற்காக, அவரது குடும்பம் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது.
விளையாட்டு
1.வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற்றார்.
2.2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக உலக ஒருங்கிணைந்த துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டி புதுதில்லியில் நடைபெறுகிறது.
3.மங்கோலியாவில் நடைபெறவுள்ள ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசியக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மங்கோலிய தலைநகர் உலன்பட்டாரில் வரும் செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கவுள்ளன.
இன்றைய தினம்
- சர்வதேச உடல் உறுப்பு தான தினம்
- ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)
- மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)
- சர்வதேச இடது கையாளர்கள் தினம்
- தென்னகம்.காம் செய்தி குழு