தமிழகம்

1.சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை அமிர்தா பல்கலைக்கழகத்துக்கு 8-ஆவது இடம் கிடைத்துள்ளது.


இந்தியா

1.தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் பெற்ற விவரங்களையும், நன்கொடை அளித்தோரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


வர்த்தகம்

1.உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 2.86 சதவீதமாக அதிகரித்துள்ளது.இப்பணவீக்கம் முந்தைய பிப்ரவரி மாதத்தில் 2.57 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 4.28 சதவீதமாகவும் இருந்தது.

2.இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் ரூ.21,539 கோடியாக உயர்ந்துள்ளது.

3.டிசிஎஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.8,126 கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம்

1.ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய – ரஷ்ய உறவை மேம்படுத்த சிறப்பாக பணியாற்றியது மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான நட்புறவைப் பேணியது ஆகியவற்றைப் பாராட்டி இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்த விருதை அளிப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

2.நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3.முதல் முறையாகப் படம் பிடிக்கப்பட்டுள்ள கருந்துளைக்கு(Black hole), பொவேஹி(Powehi) என பெயரிடப்பட்டுள்ளது.அலங்கரிக்கப்பட்ட, அளவிட முடியாத கரும் தோற்றம்(adorned fathomless dark creation) என்று பொருள் கொண்ட அந்த ஹவாய் மொழி பெயரால், ஹவாய் பல்கலைகழகப் பேராசியர் லேரி கிமூராவால் சூட்டப்பட்டது.


விளையாட்டு

1.சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சாய்னா நெக்வால் 8-21, 13-21 என்ற கேம் கணக்கில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின்  ஒஹுகராவிடம் தோல்வியுற்றார்.


ன்றைய தினம்

  • ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
  • கூகுள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது(2006)
  • அமெரிக்காவின் முதல் வணிக செயற்கைகோளான வெஸ்டார் 1 ஏவப்பட்டது(1974)
  • ஐயன் ஃபிளமிங், தனது முதலாவது ஜேம்ஸ் பாண்ட் புதினத்தை வெளியிட்டார்(1953)

– தென்னகம்.காம் செய்தி குழு