தமிழகம்

1.விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கும் மத்திய அரசு திட்டத்தில் தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் பேர் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

2.பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவை மண்டபமானது விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவைச் செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்ஆளுமை திட்டத்தால் 35 சதவீதம் அளவுக்கு காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தியா

1.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடையுள்ள மனிதர்களால் இயக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (எம்பி-ஏடிஜிஎம்) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

2.ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து ஹிமாசலப் பிரதேசத்தின் 27-ஆவது ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா கடந்த 1 -ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

3.பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக முன்னாள் அமைச்சரவைச் செயலர் பி.கே. சின்ஹா  நியமிக்கப்பட்டார்.


வர்த்தகம்

1.கூடுதல் சுங்க வரியிலிருந்து முதல் சுற்று விலக்கு பெறுவதற்குரிய முதல் தொகுதி அமெரிக்கப் பொருட்களின் பெயர்ப்பட்டியலை சீனா  வெளியிட்டுள்ளது.இந்தப் பொருட்களுக்கான வரிவிலக்கு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும். அமெரிக்கா வர்த்தக சர்ச்சையை கிளப்பிய பின், கூடுதல் சுங்க வரியிலிருந்து முதல் சுற்று விலக்கு பெறுவதற்குரிய பெயர்ப்பட்டியலைச் சீனா வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.


உலகம்

1.பிரிட்டனில் பயிலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய விசா விதிகளை அரசு அறிவித்துள்ளது.

2.கனடா நாட்டு நாடாளுமன்றம் பிரதமர் ஜஸ்டின் டுரூடோவின் பரிந்துரைப்படி கலைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.யூரோ 2020 தகுதிச் சுற்றில் பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்டவை தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.


ன்றைய தினம்

  • ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609)
  • சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)
  • ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)
  • துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)
  • ஹாங்காங்கில் ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது(2005)

– தென்னகம்.காம் செய்தி குழு