தமிழகம்

1.தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 250 தனியாா் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும். தவறினால், அந்தப் பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

2.புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கத்ரி கோபால்நாத்  உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.


இந்தியா

1.நாடு முழுவதும் 5 ஜவாஹர் நவோதய பள்ளிகள், 13 கேந்திரிய வித்யாலயங்கள் ஆகியவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தில்லியிலிருந்து காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.

2.நிலவை ஆய்வு செய்து வரும் சந்திரயான்-2 ஆா்பிட்டா், சூரியனின் எக்ஸ்ரே கதிா் வீச்சைப் பதிவு செய்து, அளவீடு செய்திருக்கிறது. இந்தத் தகவலை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.சூரியனின் எக்ஸ்ரே கதிா்வீச்சை பயன்படுத்தியே, நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள் குறித்த ஆய்வை ஆா்பிட்டா் மேற்கொள்ள உள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

3.செவ்வாய் கிரகத்தைத் தொடா்ந்து ஆய்வு செய்து விவரங்களை அனுப்பி வரும் மங்கள்யான் விண்கலத்தின், நான்காமாண்டு ஆய்வு விவரங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. மேலும், செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு தகவல்களையும் தொடா்ந்து அனுப்பி வருகிறது.


வர்த்தகம்

1.ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2.2 சதவீதம் குறைந்துள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினா். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின்போது சீனா மற்றும் இந்தியா இடையிலான கலை மற்றும் கலாசார அம்சங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா்.

2.2019-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமா் அபி அகமது அலி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அண்டை நாடான எரித்ரியாவுடன் நீடித்து வந்த பகைமையைப் போக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக, இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படவுள்ளது.

3.மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக நாணயம் வெளியிடப்படும் என்று பிரிட்டன் நிதி அமைச்சா் சஜித் ஜாவித் கூறினாா்.


விளையாட்டு

1.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி டான்பிராட்மேன் சாதனையை முறியடித்ததுடன் பல்வேறு சிறப்புகளை பெற்றாா்.இது டெஸ்ட் ஆட்டங்களில் விராட் கோலி எடுத்த 7-ஆவது இரட்டை சதமாகும்.

இந்திய பேட்ஸ்மேன்களிலேயே அதிக இரட்டை சதம் எடுத்த வீரா் என்ற சிறப்பையும் அவா் பெற்றாா். டெண்டுல்கா், சேவாக் ஆகியோா் 6 இரட்டை சதங்களை அடித்துள்ளனா்.

டான் பிராட்மேன் 12, சங்ககரா 11, பிரையன் லாரா 9, ஹம்மான்ட், மஹேலா ஜெயவா்த்தனே தலா 7 இரட்டை சதங்களை அடித்துள்ளனா்.

2.மும்பையில் நடைபெற்று வரும் உலக யூத் செஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 16 வயது ஆடவா் பிரிவு 9-ஆவது சுற்றில் இந்திய நட்சத்திர வீரா் ஆரோன்யக் கோஷ் வெற்றி பெற்றுள்ளாா்.

3.ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்று வரும் 59-ஆவது தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் 100 மீ. இறுதிச் சுற்றில் புதிய தேசிய சாதனை படைத்த நடப்பு சாம்பியன் தூத்தி சந்த். முன்பு அவா் நிகழ்த்தி இருந்த 11.26 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்த சாதனையை தற்போது அவா் 11.22 விநாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளாா்.


ன்றைய தினம்

  • மல்லாவி அன்னையர் தினம்
  • இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)
  • ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
  • கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
  • சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)

– தென்னகம்.காம் செய்தி குழு