Current Affairs – 12 October 2018
தமிழகம்
1.சென்னைத் துறைமுகத்தில் சுமார் ரூ. 17 கோடி செலவில் அமைக்கப்பட்ட சர்வதேச பயணிகள் முனையம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.
2.சென்னை-சேலம்-சென்னை இடையேயான விமான சேவையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதங்களில் மட்டும் 17,621 பயணிகள் பயணித்துள்ளனர்.
3.மின்னணு நெல்கொள்முதல் திட்டத்துக்கான மென்பொருள் செயல் முறையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்தியா
1.2019-ஆம் ஆண்டு பத்ம விருதுகள் பெறுவதற்காக 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியது.
2.கங்கை நதியைப் பாதுகாக்க வலியுறுத்தி, உத்தரகண்டில் 111 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி.அகர்வால், ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
3.மாற்றுத்திறனாளி பயணிகளின் வசதிக்காக, பிரத்யேக ரயில் பெட்டியை ஐ.சி.எஃப் தயாரித்துள்ளது.
வர்த்தகம்
1.போலிகளை ஒழிக்க, ‘ஆடிட்டர்’ சான்றளிக்கும் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைக்கு, தனி அடையாள எண்ணுடன், வலைதளத்தில் பதிவு செய்யும் திட்டம் 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
2.நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு ஏப்ரல்-செப்டம்பர் மாத கால அளவில் 5.12 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகம்
1.சிங்கப்பூருக்கும், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை தொடங்கியது.
சாதாரண பருவ நிலையில் தொடர்ந்து 19 மணி நேரத்துக்கு நீளவிருக்கும் இந்தப் பயணம்தான், உலகிலேயே மிக நீண்ட விமான பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
2.மலேசியாவில் மரண தண்டனைகளுக்கு முடிவு கட்ட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
3.தஜிகிஸ்தான் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சிரோஜிதின் முஹ்ரிதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
விளையாட்டு
1.பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் செளரவ் செளத்ரி துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். 16வயதே ஆன செளத்ரி 244.2 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார்.
2.சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு ரோஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோர் முன்னேறினர்.
இன்றைய தினம்
- மல்லாவி அன்னையர் தினம்
- இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)
- ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
- கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
- சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)
- தென்னகம்.காம் செய்தி குழு