தமிழகம்

1.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.454 கோடியில் 2,800 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

2.கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

3.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.


இந்தியா

1.மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.

2.சத்தீஸ்கர் சட்டப் பேரவை தேர்தலில் முதல்கட்டமாக, நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

3.தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல்களுக்கான அறிவிக்கையை, தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது.

4.சர்வதேச கதை சொல்லிகள் 8-ஆம் ஆண்டு விழா தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.16) தொடங்குகிறது.

5.இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இணைய கிரிமினல்கள், இந்தியாவில் உள்ள பயனாளர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை 4.36 லட்சமாக இருக்கிறது என்று இணைய பாதுகாப்பை மையப்படுத்தி செயல்படும் நிறுவனமான “எஃப் செக்யூர்’ தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 244.81கோடியை எட்டியுள்ளது.

2.முதி­ய­வர்­க­ளுக்­கான பென்­ஷன் சேவை அளிப்­ப­தில் நெதர்­லாந்து மற்­றும் டென்­மார்க் ஆகிய நாடு­கள் முன்­னிலை வகிப்­ப­தாக சர்­வ­தேச ஆய்வு தெரி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச ஆலோ­சனை நிறு­வ­ன­மான மெர்­சர், பென்­ஷன் திட்­டங்­கள் தொடர்­பான மெல்­பர்ன்
மெர்­சர் குளோபல் பென்­ஷன் இண்­டக்ஸ் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. 34 நாடு­களில் பென்­ஷன்
திட்­டங்­கள் அலசி ஆரா­யப்­பட்டு இந்த பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

3.ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டம், வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


உலகம்

1.இலங்கை அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியான இலங்கை மக்கள் கட்சியில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச இணைந்துள்ளார்.

2.முதல் உலகப் போர் நடைபெற்று 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அதற்கான நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
1914-ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப் போர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1918-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.


விளையாட்டு

1.மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டாம் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி பெற்றது.

2.சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் ஜப்பானின் கென்டோ மொமடோ சாம்பியன் பட்டம் வென்றார்.


ன்றைய தினம்

  • ஆஸ்திரியா குடியரசானது(1918)
  • அஜர்பைஜான், அரசியலமைப்பு தினம்
  • இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)
  • சூடான், துனீசியா ஆகிய நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)
  • ஜெனீவா, ஐ.நா.,வில் இணைந்தது(1968)
  • தென்னகம்.காம் செய்தி குழு