தமிழகம்

1.சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் உள்ளிட்ட பகுதிகளில் 308 வகை பறவைகள் உயிர் வாழ்வதாக, சேலம் இயற்கை மற்றும் வனவாழ் உயிரின அறக்கட்டளை நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


இந்தியா

1.மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.

2.நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 0.1 சதவீதமாக குறைந்து போனது. இது, கடந்த 21 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

3.ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் 2 பி-யை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த மாதம் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,869 கோடி டாலரை (ரூ.29.28 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.838 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

3.சிகரெட் முதல், ஓட்டல் வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவர், ஒய்.சி.தேவேஷ்வர், 72, நேற்று காலமானார்.


உலகம்

1.தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வாக்கு விகிதம் குறைந்தபோதிலும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

2.இதுவரை சாதாரண வரி விதிக்கப்பட்டு வந்த அனைத்து சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


விளையாட்டு

1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹலேப், கிகி பெர்டென்ஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

2.கோவையில் 36-ஆவது தேசிய அளவிலான இளையோர் கூடைப்பந்து போட்டி வரும் 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


ன்றைய தினம்

  • உலக செவிலியர் தினம்
  • நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்(1820)
  • சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது(1949)
  • வட ஆப்ரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது(1881)

 

– தென்னகம்.காம் செய்தி குழு