தமிழகம்

1.ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், கொடுமணல், தொல்லிடத்தில் நடக்கும் அகழாய்வுப் பணியில் பல பழைமையான அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2.நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்காக, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழகத்தை மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.


இந்தியா

1.கே.எம். ஜோசப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்குமாறு மத்திய அரசிடம் மீண்டும் பரிந்துரைக்க கொலீஜியம் குழு முடிவு செய்துள்ளது.

2மணிப்பூர் மற்றும் மேகாலய மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் ராமலிங்கம் சுதாகர், முகமது யாகூப் மிர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 4.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஐந்து மாத வளர்ச்சி விகிதங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும்.


உலகம்

1.இந்தியா – நேபாளம் இடையே நேரடி பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் இணைந்து துவக்கி வைத்தனர்.இந்தியாவின் அயோத்தியா பகுதியையும், நேபாளத்தின் ஜானக்பூர் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 


விளையாட்டு

1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் ஜான் மெக்கன்ரோவின் 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் உலகின் முதல்நிலை வீரர் ரஃபேல் நடால்.
களிமண் தரை டென்னிஸ் மைதானத்தில் அமெரிக்காவின் ஜான் மெக்கன்ரோ தொடர்ந்து 49 செட்களை குவித்திருந்தார்.

2.ஜெர்மனியின் தலைசிறந்த கிளப்புகளில் ஒன்றான ஏஎஸ்வி ரன்வெட்டர்ஸ்பேட்ச் கிளப்புடன் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யன் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்.


ன்றைய தினம்

  • உலக செவிலியர் தினம்
  • நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்(1820)
  • சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது(1949)
  • வட ஆப்ரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது(1881)

–தென்னகம்.காம் செய்தி குழு