தமிழகம்

1.தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு ஆட்சியர்கள் அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


இந்தியா

1.ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை பாதிப்பு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் தெரியவந்துள்ளது.


வர்த்தகம்

1.மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 37,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.

2.சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி), செயலாக்க முதலீடு குறைவு, தங்கத்தின் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்க விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது என்று அகில இந்திய ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் அனந்த பத்மநாபன் தெரிவித்தார்.


உலகம்

1.பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தின.
இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ ஆகியோர் இடையேயான சந்திப்பின்போது இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.


விளையாட்டு

1.ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெறவுள்ள ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் சாய்னா நெவால், சமீர்வர்மா உள்பட பல்வேறு வீரர்கள் பங்கேற்கின்றனர்.


ன்றைய தினம்

  • உலக சிறுநீரக தினம்
  • மொரீசியஸ் தேசிய தினம்
  • சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)
  • ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் கான்பரா என அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது(1913)
  • நியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)
  • கொக்க-கோலா முதல்முறையாக பாட்டிலில் விற்பனைக்கு வந்தது(1894)

– தென்னகம்.காம் செய்தி குழு