உலகம்

1.உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது.இதற்கு அடுத்த படியாக வெனிசுலாவின் கராகஸ் நகரம் 2-வது இடத்தில் உள்ளது. மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3-வது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் 4-வது இடத்திலும், மெக்சிகோவின் டிஜூவானா 5-வது இடத்திலும் உள்ளது.இவை தவிர லாபாஷ் (மெக்சிகோ), 6-வது இடத்திலும், போர்டாலிஷா (பிரேசில்) 7-வது இடத்திலும், விக்டோரியா (மெக்சிகோ) 8-வது இடத்திலும், குயானா (பிரேசில்) 9-வது இடத்திலும், பிலீம் (பிரேசில்) 10-வது இடத்திலும் உள்ளது.அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13-வது இடத்தில் உள்ளது.


இன்றைய தினம்

1.இன்று காமன்வெல்த் நாடுகள் தினம்(Commonweath Countrie’s Day).
மேபிள் இலை பொறிக்கப்பட்ட சின்னம் காமன்வெல்த்தின் கொடியாக உள்ளது. தலைமைச் செயலகம் லண்டன் நகரில் செயல்படுகிறது. காமல்வெல்த் தலைவராக இருந்த பியாரி ட்ரூடியா (Pierre Trudeau) என்பவர் காமன்வெல்த் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது திங்கள் அன்று கொண்டாடுமாறு 1976ஆம் ஆண்டில் அறிவித்தார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு