தமிழகம்

1.தமிழகம் முழுவதும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

2.சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியதாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 17.12 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 4,691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்தியா

1.மாநிலங்களவை பாஜக தலைவராக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் (71) நியமிக்கப்பட்டுள்ளார்.

2.ஏழு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் மக்களவை இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) இடைக்கால ஆணையராக , ஊழல் கண்காணிப்பு ஆணையர் சரத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

4.ஐபிபிஐ எனப்படும் திவால் மற்றும் வாராக் கடன் வாரியத்தின் பகுதி நேர உறுப்பினர்களாக தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி. ஸ்ரீராம் ஆகியோரை நியமித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

5.தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இப்போதுள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவுகளின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன. ஊதியம், சமூக பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் நலன், நிறுவனம்-தொழிலாளர் நல்லுறவு ஆகிய நான்கு பிரிவுகளுக்குள் இப்போதுள்ள 44 தொழிலாளர் சட்டங்களும் கொண்டுவரப்படவுள்ளன.

6.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபின் முதலாவது அமைச்சர்கள் கூட்டம்  தில்லியில் நடைபெறுகிறது.


வர்த்தகம்

1.பயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த மே மாதத்தில் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த 18 ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும் என இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்)  வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ, இந்த மாத இறுதியில் இந்தியா வரவிருப்பதாக அறிவித்துள்ளார்.

2.ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீனப் பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.யூரோ 2020 கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்டவை தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.


ன்றைய தினம்

  • சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
  • பிலிப்பைன்ஸ் விடுதலை தினம்
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பிறந்த தினம்(1924)
  • கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது(2006)

– தென்னகம்.காம் செய்தி குழு