தமிழகம்

1.சென்னை எழும்பூர் ரயில் நிலையக் கட்டடத்தின் 110- ஆவது ஆண்டு நிறைவு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

2.தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, மொழிப்பாடங்களுக்கான தேர்வு தாள்களின் எண்ணிக்கையை இரண்டில் இருந்து ஒரு தாளாக குறைத்து தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியா

1.சந்திரயான் -2 விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் கூறினார்.

2.தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம், தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


வர்த்தகம்

1.கார், வேன், விற்பனை சிறப்பாக இருந்ததையடுத்து சென்ற மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 19.65 சதவீதம் அதிகரித்துள்ளது.
21 பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மட்டுமே கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளதாக ரிசர்வ்
வங்கியிடம் கணக்கு காட்டியுள்ளது.

2.பார்­வை­யற்­றோர் சுல­ப­மாக ரூபாய் நோட்­டுக்­களின் மதிப்பை உணர, சிறப்பு கரு­வியை வடி­வ­மைப்­பது குறித்து ரிசர்வ் வங்கி பரி­சீ­லித்து வரு­கிறது.


உலகம்

1.ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் போராடிய முன்னணி தலைவர் எட்வர்ட் லீயங்குக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விளையாட்டு

1.ஓரே வாரத்தில் இரண்டாவது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்து நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.


ன்றைய தினம்

  • சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
  • பிலிப்பைன்ஸ் விடுதலை தினம்
  • கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது(2006)

–தென்னகம்.காம் செய்தி குழு