தமிழகம்

1.மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த தலா மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில், எம்.சண்முகம், பி.வில்சன் ஆகியோரும், திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக சார்பில் வைகோ, அதிமுக சார்பில் என்.சந்திரசேகரன், முஹம்மத் ஜான், அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

2.சிப்காட் தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.

3.திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இந்தியா

1.வீட்டு வாடகை உயர்த்தப்படுவதை 3 மாதங்களுக்கு முன்னரே குடியிருப்பவரிடம் உரிமையாளர் தெரியப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் புதிய வீட்டு வாடகைச் சட்டத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துள்ளது.

2.நாடாளுமன்றத்தில் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) தெற்கு ரயில்வேக்கு பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.4,118.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை 5 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

2.மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் வழங்கிய கடன் கடந்த நிதியாண்டில் 40 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.


உலகம்

1.இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.


விளையாட்டு

1.நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.

2.விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார்.

3.அமெரிக்காவின் ஃபுல்லர்டன் நகரில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய வீரர்கள் லக்ஷயா சென், பிரணாய், செளரவ் வர்மா முன்னேறியுள்ளனர்.


ன்றைய தினம்

  • செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
  • நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)
  • போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)
  • 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)

– தென்னகம்.காம் செய்தி குழு