Current Affairs – 12 July 2018
தமிழகம்
1.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 31 நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.
2.உலகின் மிக தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை அதன் 200-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1809-ஆம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1819-இல் சென்னையில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சனால் சென்னை அரசு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது.
3.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், ஃபோர்மேன் கிரேடு 1 மற்றும் சிறப்பு ஃபோர்மேன்களை பணியிட மாற்றம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ், செயல் தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே ஆகியோர் பதவியேற்றனர்.
2.ஆந்திர மாநிலத்தில் ‘அண்ணா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
வர்த்தகம்
1.செயலி மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.இப்புதிய வசதிக்காக விங்ஸ் என்ற செயலியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.
2.கைத்தறி துணி வகைகள், கைவினை பொருட்கள், ‘சானிட்டரி நாப்கின்’ உள்ளிட்டவற்றுக்கான, ஜி.எஸ்.டி.யை குறைப்பது குறித்து, அடுத்த வாரம் நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில்
கூட்டத்தில் பரிசீலிக்கப்படும.
3.சென்ற ஜூன் மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 37.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகள் காணாத வளர்ச்சியாகும்.
4.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலியஸ்டர் நூலிழைகள் மீது மத்திய அரசு, பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது.
5.நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்) முதல் காலாண்டில் ரூ.7,340 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
உலகம்
1.இலங்கையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு மூன்றரை அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படவுள்ளது.
2.சீனாவில் இருந்து 200 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீதம் வரி விதிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி அரங்கில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேரியது.
2.விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தோல்வியடைந்தார்.
இன்றைய தினம்
- செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
- நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)
- போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)
- 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)
–தென்னகம்.காம் செய்தி குழு