தமிழகம்

1.தமிழக காவல்துறையில் 6 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு, மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

2.நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் சோடாகார்போ என்ற இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

3.தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் கட்டுமானத்துறைக்கு 30 சதம் பங்களிப்பு உள்ளதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.


இந்தியா

1.சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்ட அலோக் குமார் வர்மா, தனது பணியைத் தொடர மறுத்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

2.2021-ஆம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

3.குஜராத்தில் 9ஆவது உலக வர்த்தக மாநாட்டை வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

4.கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

5.மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் சென்ற நவம்பர் மாதத்தில் 0.5 சதவீதமாக குறைந்து போனது. இது, 17 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2.இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி மென்பொருள் சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 3,069 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளது.


உலகம்

1.சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறும் நடவடிக்கை தொடங்கிவிட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


விளையாட்டு

1.ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியுடன் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரேஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக  தெரிவித்தார்.

2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.


ன்றைய தினம்

  • இந்திய தேசிய இளைஞர் தினம்
  • இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(1863)
  • முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது(1908)
  • நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது(1970)

– தென்னகம்.காம் செய்தி குழு