இந்தியா

1.இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.மொத்தமாக 1323 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-40 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.. கார்ட்டோசாட் செயற்கைக்கோள் மட்டும் 710 கிலோ எடைகொண்டது.கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உதவுகிறது.
2.பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
3.உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.அவர் நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில், வழக்கறிஞராக இருந்து நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உள்ளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை தொடங்குகிறது.
2.ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு