Current Affairs – 12 February 2019
தமிழகம்
1.கஜா புயல் தாக்கம், கடுமையான வறட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
2.தமிழக அரசின் தொழில்துறை செயலராக என்.முருகானந்தம் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
3.தமிழகத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில், ராஜாராமன் என்பவர் மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக செயல்பட்டவர். பாலாஜி பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக செயல்பட்டவர்.
இந்தியா
1.தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
2.இந்தியப் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் திருமணத்தை 30 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் மதோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
வர்த்தகம்
1.மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான புதிய திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்து வருவதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலர், அஜய் பிரகாஷ் ஷானி கூறியுள்ளார்.
உலகம்
1.ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாகும்.
விளையாட்டு
1.சர்வதேச ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்த மூன்றாவது இந்திய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார் சென்னையின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன். தற்போது அவர் 97-ஆம் இடத்தில் உள்ளார்.
இன்றைய தினம்
- உலக டார்வின் தினம்
- சிலி, ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1818)
- சீனக் குடியரசில் கிரெகேரியன் நாட்காட்டி அமலுக்கு வந்தது(1912)
- அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்(1809)
- இயற்கையியல் அறிஞர் சார்ளஸ் டார்வின் பிறந்த தினம்(1809)
– தென்னகம்.காம் செய்தி குழு