தமிழகம்

1.தமிழ் இசைச் சங்கம் சார்பில் இசைக் கலைஞர்கள் உமையாள்புரம் கா.சிவராமன், க.வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

2.சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.


இந்தியா

1. சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது.
இதையடுத்து, முதல்வர் பதவியை வசுந்தரா ராஜே ராஜிநாமா செய்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில், மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ்.

தெலுங்கானா தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும் வெற்றியை பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கெஜ்வாலைவிட 51,514 வாக்குகள் அதிகம் பெற்று அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

மத்திய பிரதேசத்தில்ஆட்சியமைக்க 116 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

2.புதிய ஆர்.பி.ஐ கவர்னராக சக்திகாந்தா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் நிதித் துறைச் செயல்ளாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்திகாந்தா தாஸ், கடந்த 2017, மே மாதம் ஓய்வு பெற்றார்.


வர்த்தகம்

1.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.

2.இந்தியாவில் பணியாற்றுவதற்கு உகந்த தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களின் பட்டியலில், அடோப் (Adobe)நிறுவன முதலிடத்தைப் பிடித்துள்ளது.இண்டீட் வலைதளம் இதை வெளியிட்டுள்ளது.

3.நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிடல் முறையில் விவசாயக் கடன்களை வழங்க, இந்தியாவின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதையடுத்து, அந்த ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பை அவர் ஒத்திவைத்துள்ளார்.

2.இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் நாடுகள் வர்த்தக சபை ஆலோசனைக் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதர் வெளிநடப்பு செய்தார்.


விளையாட்டு

1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.

2.ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் இந்திய கேப்டன் விராட் கோலி. அதே நேரத்தில் புஜாரா, பும்ரா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.


ன்றைய தினம்

  • கென்யா விடுதலை தினம்(1963)
  • இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911)
  • ரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979)
  • ரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1991)
  • தென்னகம்.காம் செய்தி குழு