தமிழகம்

1.சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு முதலிடத்தை தருமபுரி நகராட்சியும், வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.


இந்தியா

1.பிற நிறுவனங்களுக்காக ஒப்பந்த முறையில் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வர்த்தகம்

1.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 10-ஆவது நாளாக அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,176 வரை உயர்ந்துள்ளது.

2.நுகர்வோருக்கு நிதி உதவி வழங்கும், ‘ஹோம் கிரெடிட் இந்தியா’ நிறுவனம், கடன் வாங்குவது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வு குறித்த அறிக்கையில், கூறப்பட்டு உள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், ‘மொபைல் போன், ரெப்ரிஜிரேட்டர், டிவி’ போன்ற நுகர்பொருள் சாதனங்களை வாங்கும் பொருட்டு, கடன் வாங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு, 23.3 சதவீதம் பேரும், தனிநபர் கடன் வாங்குவதற்கு, 20.3 சதவீதம் பேரும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அடுத்து, கார் கடன் வாங்க தயாராக இருப்பதாக, 12.5 சதவீதம் பேரும், வீடு வாங்குவதற்காக, 12 சதவீதம் பேரும், தங்கம் வாங்குவதற்காக, 10.5 சதவீதம் பேரும் தயாராக இருப்பது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


உலகம்

1.சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  பெய்ஜிங் நகருக்கு வந்து சேர்ந்தார்.

2.மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில்(Guatemala) அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான 2-ஆம் கட்டத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விளையாட்டு

1. ரோஜர்ஸ் கோப்பை டிபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி மகளிர் இறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ்-பியான்கா ஆன்ட்ரிஸ்கு ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2.23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

3.ஹைதராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் செளரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி இரண்டாம் இடம் பெற்றனர்.


ன்றைய தினம்

  • உலக யானைகள் தினம்
  • சர்வதேச இளைஞர்கள் தினம்
  • சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)
  • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)
  • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)
  • ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)

– தென்னகம்.காம் செய்தி குழு