தமிழகம்

1.மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் சனிக்கிழமை பிற்பகலில் 2-ஆவது முறையாக நிரம்பியது. தற்போது அணையிலிருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி பாயும் 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பைத் தடுக்க வருவாய் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்
2.மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்ட தேசிய பாதுகாப்புப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
3.சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி இன்று பதவியேற்கிறார்.


இந்தியா

1.ரயில் பயணிகளுக்கு பயணத்தின்போது வழங்கப்படும் இலவச காப்பீடு, அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு பிறகு, காப்பீடு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும், அந்தக் காப்பீடு பெறுவதற்கான கட்டணத் தொகை இன்னும் சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக 38,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, தொடர்ந்து மூன்று வாரங்களாக சந்தைகள் ஏற்றம் கண்டு வருவது கவனிக்கத்தக்கது.
2.மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,786 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன ஹிந்து பெண்கள் மறுமணம் செய்துகொள்வதற்கு அனுமதியளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ன்றைய தினம்

1.இன்று சர்வதேச இளைஞர் தினம்(International Youth Day).
இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவது, அவர்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற பார்வை 1995ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் கவனத்திற்கு வந்தது. ஆகஸ்டு 12 ஐ சர்வதேச இளைஞர் தினமாக 1998ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இளைஞர்களின் பிரச்சினையைக் கண்டறிந்து, அதனை களைந்து அவர்களின் சக்தியை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

 

  • தென்னகம்.காம் செய்தி குழு