தமிழகம்

1.மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரும் சனிக்கிழமை இறுதிக் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்பின் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

2.தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் 6 லட்சத்து 74 ஆயிரத்து 122 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.


இந்தியா

1.மக்களவைக்கு முதல்கட்டமாக 91 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் பதிவாகின. இதில் அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 81 சதவீதமும், குறைந்தபட்சமாக பிகாரில் 53 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

2.புதிய மூலக்கூறுகள் அடங்கிய பசுமை பட்டாசு உருவாக்கம் தொடர்பான தகவல்களை இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனத்துக்கு (பிஇஎஸ்ஓ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் நிதி பத்திரங்கள் திட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், அதன் மீதான தீர்ப்பை வழங்க உள்ளது.


வர்த்தகம்

1.இந்திய நுகர்வோர், தள்ளுபடி சலுகைகள், தனிப்பட்ட சேவைகள் போன்றவற்றுக் காக, தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக, ஆக்செஞ்சுர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கான, ஐ.எஸ்.ஓ., 17088: 2008 சான்றிதழ் பெற, 25 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என்றும், அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு உள்ளதாகவும், சிபெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உலகம்

1.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) காலக்கெடு, வரும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2.விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை பிரிட்டன் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

3.இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மீண்டும் ஆட்சியமைக்கும் உரிமையை அவர் கோரியுள்ளார்.

4.பிலிப்பைன்ஸ் குகையொன்றில் பண்டைய மனித குடும்பத்தின் புதிய கிளையொன்று கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல். அவை கிடைத்த இடமான லஸோன் தீவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு ஹோமோ லஸோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவர்கள் இன்றைய இன்றைய மனித குலத்தின் நேரடி மூதாதையர்களாக இருக்க வாய்ப்பில்லை எனினும் தூரத்துச் சொந்தங்களாக இருக்க 99% வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இவர்கள் வாழ்ந்திருந்த காலம் இன்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். அன்று இந்த மனிதர்களின் உயரம் வெறும் 3 அடிகளே என   விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு

1.மலேசியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரை 4-0 என கைப்பற்றியது இந்தியா.
கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றது.

2.சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெக்வால், ஸ்ரீகாந்த், சமீர் வர்மா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • சர்வதேச விண்வெளி பயண தினம்
  • இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது(2007)
  • ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது(1606)
  • ஜிம்பாப்வே டாலர், ஜிம்பாப்வேவின் நாணயமாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது(2009)

– தென்னகம்.காம் செய்தி குழு