இந்தியா

1.இஸ்ரோவின் வழிகாட்டியான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.சுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி 41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
2.சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது.நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.இதில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.


ன்றைய தினம்

1.இன்று வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்(International Day for Street Children).
உலகெங்கும் கோடிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு