தமிழகம்

1.பிரிட்டன், அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளில் மேற்கொண்ட பயணத்தின் மூலமாக ரூ.8,835 கோடிக்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2.ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

3.ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 79 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டுவரும் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு  வழங்கப்பட்டது.இதுவரை காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், காரைக்குடி கண்டாங்கி சேலை, திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்தியா

1.உள்கட்டமைப்புத் துறை சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2.நாட்டில் உள்ள ஆளுநர்களில் இளவயது ஆளுநர் என்ற பெருமையை தெலங்கானா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தமிழிசை செளந்தரராஜன் (58) பெற்றுள்ளார். ஆந்திர ஆளுநர் விஷ்வ பூஷன் ஹரிசந்தன் (85), வயதில் மூத்த ஆளுநராக உள்ளார்.

3.நாடு முழுவதும் 2,480 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.


வர்த்தகம்

1.தங்க ஈ.டி.எஃப். திட்டங்கள் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரூ.145.29 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2.நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி இரண்டாவது காலாண்டில் ரூ.5.82 லட்சம் கோடியாக (8,200 கோடி டாலர்) அதிகரிக்கும் என இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) தெரிவித்துள்ளது.

3.2019 ஆம் ஆண்டுக்கான சியாமென் சர்வதேச முதலீட்டு வர்த்தக பொருட்காட்சி சியாமென்னில் தொடங்கியுள்ளது. இப்பொருட்காட்சியின் ஒரு பகுதியான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை வேளாண் உற்பத்திப் பொருட்கள் பொருட்காட்சியில் செப்டம்பர் 8 ஆம் நாள், கையொப்பமிடப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களின் நிதி தொகை 2950 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.


உலகம்

1.அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை பதவியிலிருந்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் நீக்கினார்.

2.இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் வணிக ஏகபோகம் குறித்தும் இணையவெளி விளம்பரச் சந்தையில் அந்த நிறுவனத்தின் ஆதிக்கம் குறித்தும் விசாரிக்கப் போவதாக அமெரிக்காவின் 50 மாகாணங்கள் அறிவித்துள்ளன.

3.சிங்கப்பூர் துணை பிரதமரும், அந்நாட்டின் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  சந்தித்துப் பேசினார்.

4.பல்வேறு துறைகளில் இந்தியா ஐஸ்லாந்து இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அதிபர் குட்னி ஜோஹான்சனுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

5.இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு பெட்ரோலியப் பொருள்களை எளிதில் எடுத்துச் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட குழாயை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியும் காணொலிக் காட்சி வாயிலாக  திறந்துவைத்தனர்.


விளையாட்டு

1.உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாரை 0-0 என டிரா செய்தது இந்தியா.

2.உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரிஜேஷ் யாதவ் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
ரஷ்யாவின் எக்டெரின்பர்க் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின. இதில் 87 நாடுகளைச் சேர்ந்த 450க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


ன்றைய தினம்

  • மண் கொடை இயக்கத்திற்காக போராடிய இந்திய அறப்போராளி வினோபா பாவே பிறந்த தினம் (1895)
  • நியூயார்க் சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம் (1893)
  • அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்
  • லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்
  • தமிழக கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்(1921)
  • நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட தினம்(2001)

– தென்னகம்.காம் செய்தி குழு