தமிழகம்

1.தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பைப் பெருக்கக் கூடிய வகையிலும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018 என்ற புதிய தகவல்தொழில்நுட்பக் கொள்கையை தமிழக முதல்வர் வெளியிட்டார்.


இந்தியா

1.பெட்ரோல், டீசல் விலை திங்கள்கிழமை மேலும் அதிகரித்தது. எனினும், அவற்றின் மீதான கலால் வரியை குறைப்பதில்லை என்ற முடிவில் மத்திய அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.

2.மத்திய கண்காணிப்பு ஆணையத் தலைவராக சரத் குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

3.தேஜாஸ் போர் விமானத்துக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.


வர்த்தகம்

1.கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.6,800 கோடி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

2.சீனாவின் மிகப்பெரிய இ.காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதன் நிறுவனரான ஜாக் மா அறிவித்துள்ளார்.


உலகம்

1.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விகிதங்களை மேலும் அதிரித்தால் அதற்கான தக்க பதிலடி கிடைக்கும் என சீனா தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா வீரர் டெல் பொட்ரோவை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

2.குரோஷிய தலைநகர் ஸாக்ரெப்பில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோர் நான்கு நாடுகள் கால்பந்து போட்டியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியுற்றது.

3.விளையாட்டுத் துறையில் இந்தியா- ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான உறவை வலுப் பெறச் செய்வதற்காக பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு நட்புறவு விருது ரஷ்ய அரசின் சார்பில் வழங்கப்பட்டது.


ன்றைய தினம்

  • வினோபா பாவே பிறந்த தினம் (1895)
  • அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்
  • லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்
  • சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்(1921)
  • நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட தினம்(2001)
  • தென்னகம்.காம் செய்தி குழு