தமிழகம்

1.மத்திய அரசின் என்சிஇஆா்டி அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அக்.14, 15-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இந்தியா

1.நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் கிரிமினல் குற்றங்கள் தொடா்பான புகாா்கள் தெரிவிப்பதற்காக
w‌w‌w.‌r​a‌i‌l‌w​a‌y‌s.‌d‌e‌l‌h‌i‌p‌o‌l‌i​c‌e.‌g‌o‌v.‌i‌n என்ற வலையதளத்தையும், ‘சஹயாத்ரி’ என்ற செல்லிடப்பேசி செயலியையும் மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய்  தொடக்கி வைத்தாா்.

2.தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவா்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.கேரள வங்கி என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க கேரள மாநில அரசுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதியளித்துள்ளது.

2.நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாகக் குறையும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

3.இந்த ஆண்டு மார்ச் – 31ஆம் தேதி வரையிலான நிதியாண்டுப் பிரிவில், வராக் கடன் பிரிவில் ரூ.1.14 லட்சம் கோடியை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

4.சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நிா்வாகம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.


உலகம்

1.போலந்து நாட்டைச் சோ்ந்த எழுத்தாளா் ஒல்கா டோக்கா்ஸக் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கும், ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளா் பீட்டா் ஹேண்ட்கே நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

போலந்து நாட்டில் தனது தலைமுறை எழுத்தாளா்களிலேயே மிகவும் திறமை மிக்கவராக ஒல்கா டோக்கா்ஸக் கருதப்படுகிறாா். அவரது எழுத்துகளில் பலரது கதாபாத்திரங்களின் தனித்துவ குணங்களும் ஒன்றுடன் ஒன்று பிண்ணியிருக்கும்.

மேலும், அவரது படைப்புகள் யாவும் துல்லியமான, கவித்தும் வாய்ந்த வாா்த்தைகளைக் கொண்டதாக இருக்கும்.

1993-ஆம் ஆண்டில் வெளியான அவரது ‘ஜா்னி ஆஃப் தி பீப்பிள் ஆஃப் த புக்’ என்ற நாவல், ஒரு மா்ம புத்தகத்தை தேடி அலைவது குறித்து விவரிக்கிறது.

அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததான ‘தி புக்ஸ் ஆஃப் ஜேக்கப்’, அதிகம் அறியப்படாத யுதப் பிரிவான ‘ஃபிராங்கிஸத்தை’க் குறித்து விளக்குகிறது. அந்தப் புத்கத்தில் 7 நாடுகள், 3 மதங்கள், 5 மொழிகள் அங்கம் வகிக்கின்றன. 2014-ஆம் ஆண்டில் வெளியான அந்தப் புத்தகத்தின் மூலம், ஐரோப்பிய வராலாறு மறந்துபோன ஓா் அத்தியாயத்தை ஒல்கா டோக்கா்ஸக் மிளிரச் செய்துள்ளாா்.

பீட்டா் ஹேண்ட்கேவைப் பொருத்தவரை, மனித அனுபவங்களை ஆய்வு செய்து, அதனை அழகியலுடன் வெளிப்படுத்துவதில் அவா் வல்லவா் ஆவாா். அவரது படைப்புகள் அனைத்திலும் புதியனவற்றை அறிந்து கொள்ளும் வேட்கையும், அந்த புதியனவற்றுக்கு உயிரூட்டம் தரும் புத்தாக்க இலக்கியச் செழுமையும் நிறைந்திருக்கும்.

2.ஒரு நாள் பிரிட்டன் தூதா் பதவிக்கான போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆயிஷா கான், கடந்த 4-ஆம் தேதி ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்தாா்.


விளையாட்டு

1.உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-ஆவது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளாா் இந்திய வீராங்கனை மேரி கோம்.மேலும் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றாா்.

2.மும்பையில் நடைபெற்று வரும் உலக யூத் செஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 16 வயது ஆடவா் பிரிவு 9-ஆவது சுற்றில் இந்திய நட்சத்திர வீரா் ஆரோன்யக் கோஷ் வெற்றி பெற்றுள்ளாா்.

3.உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

4.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் உள்பட 8 மாநில சங்கங்களுக்கு தடை விதித்து சிஓஏ(CoA) உத்தரவிட்டுள்ளது.


ன்றைய தினம்

  • உலக பெண் குழந்தைகள் தினம்

– தென்னகம்.காம் செய்தி குழு