தமிழகம்

1.கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாதவரத்தில் புதிய அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்து வைத்தார்.

2.தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கிடும் வகையில், 471 புதிய பேருந்துகளை முதல்வர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

3.தமிழக காவல்துறையில் பதவி உயர்த்தப்பட்ட 67 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) புதிய பணியிடங்களில் நியமனம் செய்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை உத்தரவிட்டார்.

4.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் இணையம் மூலம் இணைக்கப்பட்டுவிடும் என தலைமை தபால்துறை அதிகாரி (தமிழ்நாடு வட்டம்) எம்.சம்பத் கூறினார்.


இந்தியா

1.ரயில்வே துறையில் அதிகாரமில்லாத பணிகளில் உள்ள 11.91 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2.இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் துஷார் மேத்தா, நியமிக்கப்பட்டார்.

3.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் குறைந்தது 3 முறையாவது கட்டாயம் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

4.திருப்பதி மற்றும் பெராம்பூர் ஆகிய பகுதிகளில், அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது.


வர்த்தகம்

1.சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் அளவு குறைவாக உள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது.


உலகம்

1.மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் முகமது சோலீ வெற்றி பெற்றதாக வெளியான முடிவுகளை எதிர்த்து அதிபர் அப்துல்லா யாமீன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


விளையாட்டு

1.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வில் வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்கும், 100 மீ ஓட்டத்தில் நாராயண் தாக்குரும் தங்கப் பதக்கம் வென்றனர்.

2.சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • உலக பெண் குழந்தைகள் தினம்
  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)
  • ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது(1811)
  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)
  • தென்னகம்.காம் செய்தி குழு