இந்தியா

1.UDAN (Ude Desh ka Aam Naagrik) திட்டத்தின்கீழ் முதல் ஹெலிஹாப்டர் சேவை ஸ்ரீநகரில் இருந்து திராஸ் ( Drass ) பகுதிக்கு துவங்கப்பட்டுள்ளது.
2.கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்க, கர்நாடகா அரசு Mathru Poorna திட்டத்தை துவக்கியுள்ளது.
3.உலகில் அதிக அணு உலைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் வகிக்கிறது. ( 20 அணு உலைகள் )இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது . ( 6 அணு உலைகள் )அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் அணு உலைகளை மூடி வருகின்றன.
4.தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 13வது அமைப்பு தினம் செப்டம்பர் 28ல் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் கருப்பொருள் — School Safety ஆகும்.
5.ஷீரடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து, மும்பைக்கு முதல் விமான சேவையையும் தொடங்கி வைத்துள்ளார்.


உலகம்

1.சுவீடன் நாட்டின் நோபல்பரிசு கமிட்டி, நோபல் பரிசுத்தொகையை 8 மில்லியன் குரோனாரில் இருந்து 9 மில்லியன் குரோனாராக ( சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் ) உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளது.( 10 மில்லியன் குரோனாரில் இருந்து கடந்த 2012ல் 8 மில்லியன் குரோனாரக குறைக்கப்பட்டு இருந்தது ).
2.போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓட்டுனர் இல்லா ஹெலிஹாப்டர் ( Autonomous Air Taxi – AAT ) துபாயில் பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.இதனை ஜெர்மனியைச் சேர்ந்த Volocopter நிறுவனம் தயாரித்துள்ளது.
3.நேபாள நாட்டின் குமாரி கடவுளாக டிரிஷ்னா ஷாக்யா என்ற 3 வயது பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரை அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையில் தங்கவைத்துள்ளனர். குமாரி கடவுள் ஆண்டிற்கு 13 முறை மட்டுமே அரண்மனையை விட்டு வெளியே வர முடியும்.
4.துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்படுகிறது.
அதற்காக 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது. இது ரூ.879 கோடி (100 மில்லியன் டாலர்) செலவில் துபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது.இதற்கு செவ்வாய் கிரக அறிவியல் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child).
பெண் குழந்தைகள் உலகம் முழுவதும் பாலின பாகுபாட்டால், சமத்துவமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகிறது. அது தவிர குழந்தை திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 11 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா. சபை 2011இல் அறிவித்தது.
2.1852 – ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு