தமிழகம்

1.அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது 2 நாளில் புயலாக வலுவடையவுள்ளது.

2.இந்தியாவில் முதல்முறையாகப் போக்குவரத்து போலீஸாருக்காக சிக்னலுடன் இணைந்த “பயோ டாய்லெட்’ வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கோவை, அவிநாசி சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி சிக்னலில், நாட்டிலேயே முதல்முறையாகப் போக்குவரத்து போலீஸாரின் வசதிக்காக ரூ. 4 லட்சம் மதிப்பிலான “பயோ டாய்லெட்’ அமைக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.மிஸோரம் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவிக்கு புதியவரை நியமிக்க பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்த மாநில தலைமைச் செயலரிடம் வலியுறுத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அக்டோபர் இறுதி நிலவரப்படி ரூ.22.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2.பல வார சரிவுக்குப் பிறகு, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் முதல் முறையாக 105 கோடி டாலர் உயர்வைக் கண்டுள்ளது.


உலகம்

1.இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்திருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

2.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்த வைத்தார்.


விளையாட்டு

1.உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்தியா கிராண்ட்மாஸ்டர் ஹரிகா போராடி டிரா செய்துள்ளார்.


ன்றைய தினம்

  • போலந்து விடுதலை தினம்(1918)
  • மாலத்தீவு குடியரசு தினம்(1968)
  • வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்(1930)
  • இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)
  • தென்னகம்.காம் செய்தி குழு