தமிழகம்

1.உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான தொடக்கப் பணியாக வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கான வழிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.


வர்த்தகம்

1.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தொடர்ந்து 8-ஆவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

2.தனது கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகித்தை ஆண்டுக்கு 8.45 சதவீதமாக பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.

3.பிரிட்டனின் 259 ஆண்டு பழம்பெருமை வாய்ந்த பொம்மை விற்பனை நிறுவனமான ஹம்லீஸை, முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையகப்படுத்தியுள்ளது.


உலகம்

1.இந்தியப் பெருங்கடல் பகுதியில் தங்களது பலத்தை அதிகரிக்கும் வகையில், இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து, இதுவரை இல்லாத அளவில் நடத்திய மிகப்பெரிய கூட்டுப்பயிற்சி (வருணா)  நிறைவு பெற்றது.

2.இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியைக் காப்பதில், நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க இந்தியாவும் வியட்நாமும் உறுதிகொண்டுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்.

2.இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

பிறப்புக்கள்

1895 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவஞானி (இ. 1986)
1897 – சுத்தானந்த பாரதியார், கவியோகி (இ. 1990)
1897 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)

இறப்புகள்

1976 – அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)

சிறப்பு நாள்

தேசீய தொழில் நுட்ப தினம் – இந்தியா

– தென்னகம்.காம் செய்தி குழு