தமிழகம்

1.போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து, அபராதத்தை பணமாக பெறுவதைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பெறும் புதிய நடைமுறையை சென்னை மாநகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது.

2.நாகப்பட்டினம் மாவட்டத்தில், காவிரிப் படுகையான நரிமணத்தில் ரூ.27, 450 கோடியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) அமைக்க உள்ளது.


இந்தியா

1.ஆதார் திட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.

2.ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான நிர்மல் சிங், சட்டப் பேரவைத் தலைவராக வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வர்த்தகம்

1.புரதச் சத்து மிகுந்த முட்டையின் வெள்ளைக் கரு அனைவரும் விரும்பிச் சாப்பிடக் கூடிய வகையில் ‘எஸ்கேஎம் பெஸ்ட் எக் வொயிட்’ என்ற பெயரில் புதுமையான வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 


உலகம்

1.மலேசியாவில்நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

3.சிரியாவின் கொலான் பகுதியில் இஸ்ரேல் நிலைகள் மீது ஈரான் புதன்கிழமை நள்ளிரவு திடீர் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.


விளையாட்டு

1.ஆஸி. ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா உள்பட இரட்டையவர் பிரிவிலும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.


ன்றைய தினம்

  • இந்திய தேசிய தொழில்நுட்ப தினம்
  • சியாம் நாடு, தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1949)
  • மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது(1924)
  • இஸ்ரேல், ஐநாவில் இணைந்தது(1949)

–தென்னகம்.காம் செய்தி குழு