தமிழகம்

1.தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகள் உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறுகிறது.


இந்தியா

1.பதினேழாவது மக்களவைக்கு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

2.பிரதமர் நரேந்திர மோடியின் செயலராக பாஸ்கர் குல்பே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.அமெரிக்காவில் துணை நிறுவனத்தை அமைக்கவுள்ளதாக மருந்து தயாரிப்பு துறையைச் சேர்ந்த சுவென் லைஃப் சயின்சஸ் தெரிவித்துள்ளது.


உலகம்

1.ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி, இராக் நாட்டுக்கு இந்த வாரம் சுற்றுப்பயணமாக செல்லவுள்ளார். இதன்மூலம் இராக் செல்லும் முதல் ஈரான் தலைவர் எனும் பெருமையை அவர் பெறவுள்ளார்.

2.வட கொரியாவில் ஒற்றை வேட்பாளர் மட்டுமே பங்கேற்கும் பெயரளவிலான “நாடாளுமன்றத் தேர்தல்’ ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது.


விளையாட்டு

1.பின்லாந்தின் ஹெல்சிங்கியில் நடைபெற்று வரும் ஜிபி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.

2.அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் 18-ஆம் நிலை வீரர் நிக்கோலஸ் பஸிலாஷ்வில்லியை வீழ்த்தி இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது வாழ்க்கையில் பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது(1861)
  • ஜாம்பியா இளைஞர் தினம்
  • ரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)

– தென்னகம்.காம் செய்தி குழு