Current Affairs – 11 March 2018
இந்தியா
1.ஆர்.எஸ்.எஸ். என்றழைக்கப்படும் ராஷ்டரிய சுவயம்சேவக் சங் இயக்கத்தின் பொதுச் செயலாளரான பைய்யாஜி ஜோஷியின் பதவிக்காலம் இன்று மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2.தெலுங்கு தேசம் எம்.பி. ராஜினாமா செய்துள்ளதையடுத்து விமான போக்குவரத்து துறை மந்திரியாக வர்த்தகத்துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்தியாவின் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்றார்.
இன்றைய தினம்
1.1983 – பாகிஸ்தான் அணு ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது.
–தென்னகம்.காம் செய்தி குழு