தமிழகம்

1.தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தில்லி செல்லவுள்ளனர்.

2.உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா

1.பிரான்ஸில் நடைபெறும் ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். பிரான்ஸின் பியாரீட்ஸ் நகரில் வரும் ஆகஸ்ட் 24 முதல் 26-ஆம் தேதி வரை ஜி7 நாடுகளின் 45-ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

2.மருத்துவக் கல்வித் துறையில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் கொண்டு வரும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மீண்டும் அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கான தலைவராக சினன் ஓஸ்கோக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த மே மாதத்தில் வாகன உற்பத்தியை 18 சதவீதம் குறைத்ததாக தெரிவித்துள்ளது.


உலகம்

1.நேபாளத்தில் கடந்த 2015-இல் ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் சேதமடைந்த வீடுகளை மறுகட்டமைக்க மேலும் ரூ.100 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.

2.போலி வங்கிக் கணக்குகள் தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி  கைது செய்யப்பட்டார்.


விளையாட்டு

1.பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸில், இங்கிலாந்து, இத்தாலி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

2.எப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, அமெரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளன.

3.இந்திய அணியின்  கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.


ன்றைய தினம்

  • நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)
  • ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டது(2002)
  • தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)

– தென்னகம்.காம் செய்தி குழு