தமிழகம்

1.நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் கையாடல் செய்யப்படுவதைத் தடுக்க , நுகர்வோர் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொருள்களை பெற முடியும் என்ற வகையிலான புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.


இந்தியா

1.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக முன்னாள் தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவர் சரத் குமார்  நியமிக்கப்பட்டார்.


வர்த்தகம்

1.கடந்த நிதியாண்டில் (2017-2018) பொதுத் துறை வங்கிகளில் ஒட்டுமொத்தமாக ரூ.87,357 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
21 பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மட்டுமே கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளதாக ரிசர்வ்
வங்கியிடம் கணக்கு காட்டியுள்ளது.


உலகம்

1.சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லை என்று பிரதமர் மோடி மறைமுகமாகக் கூறினார்.


விளையாட்டு

1.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்புச் சாம்பியனுமான ரஃபேல் நடால் 11-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

2.மும்பையில் நடந்த இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.


ன்றைய தினம்

  • நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)
  • இந்திய அரசியல் தலைவர் லாலு பிரசாத் பிறந்த தினம்(1947)
  • ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டது(2002)
  • தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)

–தென்னகம்.காம் செய்தி குழு