Current Affairs – 11 July 2019
தமிழகம்
1.வேலைவாய்ப்பற்ற பெண்கள், ஆதிதிராவிடர்களுக்கு சுயதொழில் முனைவதற்கான பயிற்சி ரூ.100 கோடி செலவில் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அறிவித்தார்.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு தற்காலிகமானதுதான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.விண்ணப்பித்த 11 நாள்களில் மக்களுக்கு தற்போது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளிக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
3.ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
வர்த்தகம்
1.நாட்டிலுள்ள, 21 பிராந்திய கிராமப்புற வங்கிகள், ஒன்றிணைக்கப்பட்டுள்ளன, என, நிதித்துறை இணையமைச்சர், அனுராக் தாகூர், லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
உலகம்
1.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 22ஆம் தேதி சந்தித்துப் பேச இருக்கிறார். இதனை அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
2.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர்ப்பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில், இவ்விரு நாடுகளும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளன.
விளையாட்டு
1.காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆம் நாளான புதன்கிழமை, பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தமாக 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
2.உலக பல்கலைக்கழகங்கள் இடையேயான விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
3.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 23-ஆம் நிலையில் உள்ள ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இன்றைய தினம்
- சர்வதேச மக்கள்தொகை தினம்
- மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்(1576)
- நியூயார்க் நகரில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)
- மங்கோலியா, சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)
– தென்னகம்.காம் செய்தி குழு