Current Affairs – 11 July 2018
தமிழகம்
1.நீட் தேர்வு வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
2.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
3.அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மின்சார வாரியங்களின் தரவரிசையில் தமிழகம் 28 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா
1.மாநிலங்களவையில் கூடுதலாக 5 மொழிகளுக்கான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.தொழில் நடத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு 15-ஆவது இடம் கிடைத்துள்ளது.
2.தமிழகத்தின், 25 பொதுத் துறை நிறுவனங்கள், 9,366.31 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுவதாக, மத்திய தணிக்கை துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.இந்தியா – தென் கொரியா இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பொருளாதாரம், வர்த்தக நடவடிக்கைகள், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அவற்றில் முக்கியமானவையாகும்.
2.தாய்லாந்தில் வெள்ள நீர் புகுந்த குகைக்குள் கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
விளையாட்டு
1.உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது.
அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தியது
2.விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றுக்கு ஆடவர் பிரிவில் டெல் பொட்ரோ, மகளிர் பிரிவில் செரீனா, ஓஸபென்கோ, கெர்பர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- சர்வதேச மக்கள்தொகை தினம்
- மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்(1576)
- நியூயார்க் நகரில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)
- மங்கோலியா, சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)
–தென்னகம்.காம் செய்தி குழு